18
Dec
நேவிஸ் பிலிப்
வானில் புது வெள்ளி தோன்றி
சேதி ஒன்று சொன்னது
வானவராம் தேவ மைந்தன்
மண்ணகத்தில் பிறந்தாரம்
பாதையோர...
18
Dec
விசைத்தறி இவளோ……….
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
நெய்து நெயது நெய்தே தொடர்ந்து
கொய்து கொய்து குறுகிய கைகள்
எத்தனை விசையுடன் தொடர்ந்தன பொழுதுகள்
அத்தனை...
18
Dec
” தமிழின் ஞாயிறு “
-
By
- 0 comments
ரஜனி அன்ரன் (B.A) " தமிழின் ஞாயிறு " 18.12.2025
நல்லூர்தந்த ஞானச்சுடர்...
ஔவை
கற்றவர் இயல்பு
===============
அற்புத வாய்ப்பை அனைவர்க்கும் காட்டுவர்
வெற்றிப் பொழுதிலும் வேறாகார் – கற்றவரே
நற்றுணை போலே நலமுடன் வாழ்ந்திடப்
பெற்றுத் தருவரே பேறு.
பெற்றவர் போற்றிப் பெருமையும் கொள்ளவே
உற்றவர் என்றும் உவகையுறக் -கற்றவரே
நற்சான்று பெற்றிடுவர் நாளும் உலகிலே
வெற்றியே கிட்டிடும் வாழ்வு.
சிற்றின்ப வாழ்வில் சிறப்புடன் ஓங்கிட
வற்றாத இன்பம் வளம்சேர்க்கும் -கற்றவரே
குற்றம் களைந்து குடும்பம் நடத்துவர்
நற்பண்பில் ஓங்குமே நாடு.
வற்றாத ஊற்றாய் வளம்தரும் நீராக
நற்செயல் செய்திட நாடுவர் – கற்றவரே
வெற்றியை நோக்கியே வென்றிட வைத்திடப்
பற்றி இழுப்பரே பார்.
ஔவை.
Author: Nada Mohan
19
Dec
-
By
- 0 comments
அநீதியை எதிர்த்திங்கு பொங்குவாய்
நீதியின் பக்கம் தங்குவாய்
மெய்யுரைக்காது பல வாய்
பொய்யை...
17
Dec
-
By
- 0 comments
குட்டக் குட்ட குனிந்தே கிடப்பதா
முட்டுக் கொடுத்தே வாழ்க்கை நகர்வதா
எத்தனை காலம்...
16
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இன்று பாரதி இருந்திருந்தால்...
புதுக்கவியாளன் பாரதியே
படைத்தெழு படைப்பே பாரெங்கும்
முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...