சாரளத்தின் ஓளியில்

நேவிஸ் பிலிப் கவி இல(147) 19 /09/24

பேருலகின் உட் செல்ல
எனக்காகான வாசல்
என்வீட்டு சாரளம்

வைகறை விடியலிலே
எழுகின்ற கதிரவனின்
மிதமாய் பரவும்
பொன் ஒளிக் கீற்றும்

நறுமணம் வீசிட
இதமாய் உடல் வருடும்
இளம் தென்றல் காற்றும்
பதமாய் தங்கிடுமே என்னறையில்

பரந்து விரிந்த பசுமை
பாடும் பறவைக் கூட்டம்
காலை நேரக் காட்சிகள்
பொன் வண்ணக் கதிரொளியில்

வெண்ணிலா முழுமதியாய்
தண்ணொளி பரப்பிடவே
நட்சத்திர தோழிகளும்
பவனி வரும் கண் கொள்ளா காட்சி
இரசிக்கின்றேன் சாரளத்தின் வழியே.

நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan