மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 284
29/10/2024 செவ்வாய்
“ சலவை”
—————
அழுக்குப் போக்கிடும் சலவை!
அகிலத்தில் வேண்டும் சலவை!
இழுக்கு போக்கிடவும் சலவை!
இதயம் வெளுத்திடவும் சலவை!

துணிக்கு மட்டுமல்ல சலவை!
துஷ்டர்க்கும் வேணும் சலவை!
பணிகள் மேலோங்கச் சலவை!
பாங்காய் மிளிர்ந்திட சலவை!

பணம் வெள்ளையாக்க சலவை;
படித்தவரும் செய்வாரிச் சலவை!
குணத்தை மேலாக்கச் சலவை;
கொடுப்பர் ஞானிகளிச் சலவை!

மூளைக்கு செய்திடும் சலவை,
முனைப்புக் காட்டிடும் சலவை!
ஆளுக்காள் செய்யும் சலவை,
அதிகார மோகத்தின் சலவை!

வெளுத்தது யாவும் வெள்ளையா!
விளங்கிட மனமதும் இல்லையா!
அழுத்தியும் அடங்கா எல்லையா!
அதற்கும் அதிகார தொல்லையா!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading