ஒளியிலே தெரிவது

கெங்கா ஸ்ரான்லி

ஒளியிலே தெரிவது உண்மைகள்
இருட்டிலே மறைவது பொய்மைகள்
வெளிச்சம் போட்டுக் காட்டும் நேர்மை
பளிங்குபோல் மினுங்கும் நீதி
சூரியன் வரவால் ஒளி வருகிறது
சூரியன் மறைந்தால் இருள்வருகிறது
பெளர்ணமி நிலவிலும் ஒளி இருக்கும்
பகலைப் போல அல்லவே
ஒளிஇன்றேல் உயிரினங்கள் இல்லை
உண்ண உணவும் இல்லை
வாழவழியும் இல்லை வர்ணங்கள் ஏதும் இல்லை
ஒளியினாலே இயற்கை பசுமையடைகிறது
ஒளிக்கதிர் வேகத்தில் அனிவியல்
முன்னேற்ற மடைகிறது
நடுகல்லுக்கு ஒளிச்சுடர்
ஏற்றி வணங்கும்பபோது
ஒளியிலே தெரிவது
தமதுயிரை ஈகை செய்த
மாவீர்ரின் மனமும் முகமும் தானே!

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading