ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

மாதவமே உன்னை!

நகுலா சிவநாதன்

மாதவமே உன்னை!

பாதகம் இல்லாப் பார்வையின் தரிசனம்
மாதவம் போலே மங்காத தியாகம்
வானவர் வாழ்த்த வருமொழி சேர்ந்திட
ஞானத்தில் ஒளிரும் நற்தீபம் கார்த்திகைத் தீபம்

கல்லறை தோறும் காரிருள் சூழ
கானகத்தின் ஒளிப்பிழம்பு தூரத்தெரிய
விண்மீன்கள் தண்னொளி பாய்ச்சிட
விளக்கும் தீபம் மாவீர மாதவமே!

மாதவம் உன்னை மானிடர்க் களிக்க
சேய்தவம் புரிந்த செங்காந்தள் மலர்விரிய
பாதகம் செய்வோர் தீமையின் பிடியினில்
பக்குவம் பேசும் வீரரின் தியாகம்
விண்ணுறை போற்றுமே!

நகுலா சிவநாதன் 1788

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading