ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

மாதவமே உந்தனை…..

ரஜனி அன்ரன்

மாதவமே உந்தனை…..கவி….ரஜனி அன்ரன் (B.A) 28.11.2024

மாதவ மறவரே மண்ணின் மைந்தரே
மறப்போமா உமை நாம்
தாயகமே தாரக மந்திரமாய்
தார்மீகமே இலட்சியமாய்
தியாகமே உன்னத குறிக்கோளாய்
விடியல் கனவோடு வித்தாகிய
புனிதமான உம் தியாகங்கள்
தற்கொடையான ஈகங்கள்
தமிழர் எமக்குக் கிடைத்த மாதவமே !

தோல்வியைச் சிந்தனையாக்கி
வெற்றியைப் புனிதமாக்கி
தன்னிலை மறந்து தேசத்தின் நினைவோடு
துயரம் தவிர்த்து வாழ்வினை ஈந்த
தூயவரே மாதவரே நீவிர் எம் ஒளியே !

தேசத்தின் தெருக்களெல்லாம்
தெம்மாங்காய் எழுச்சி கொள்ள
கல்லறை வீரர் கனவினைப் போற்ற
எல்லைகள் தாண்டியும்
எழுச்சி கொள்வோம்
மண்ணிற்கு ஒளிதந்த
மாதவ மணிகளை மண்ணின் மைந்தரை
மாதவமாக மனதிற் கொள்வோம் – அவர்
சந்ததி காக்கவும் கரமிணைப்போம் !

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading