ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

மாதவமே உந்தனை……..

இரா.விஜயகௌரி

மாதவமே உந்தனை மறக்கலாகுமோ
எங்கள் மாவீர மணிகளை நாம்
விலக்கலாகுமோ. விலகல் ஆகுமோ
செய்நன்றி. கொன்றாராய் மாறிடலாமோ

வித்துடலை தான் விதைத்து- தினம்
விடுதலையின் மூச்சிழைத்து பெற்றவளை
தான் விடுத்து ஆகுதியின் தீக்கங்காய்
உனை இறுத்து சென்றவன்நீ

காலங்கள்மறைகிறது கனதியது தொடர்கதைதான்
எண்ணக் கருக்களிலே தமிழ்தாயை சுமந்து நிதம்
கடந்த இடம் போர்ப்பறைகள்
கசிந்ததுவோ குருதி வழி

நீரலைக்குள் நினைவெழுதி
உயிர்வதைக்குள் உழல்வோரின்
கனவுகட்கு விதை விதைத்து-நம்
வருடி எழும்கரங்களினால் வணங்கிடுவோம்

மாதவமே மணிவிளக்கே உன்
தியாகத்தின் பொருள் உணர்ந்தோம்
திடச்சுவடுகளின் பெருவலி மதித்தோம்
மண்மீட்பின் சுவடுகளில் நினைவெழுதி உறவிழைவோம்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading