தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

புதிதாய் வரு வருடம்

இரா.விஜயகௌரி

நொடிகளாய் நிமிடங்களாய்
மணித்துளிகளாய். நாட்களாய்
தினமும் செயல் கொண்ட திங்களாய்
திரட்சியின் புரட்சியாய் நகர்ந்த -வருடம்

நம்பிக்கை விதை விதைத்து மாற்றம்
மாற்றம் ஒன்றே மாறாதென கருவாகி
முயற்சிகளின் முப்பரிமாணக் கோர்வையில்
நாளும் இழைந்தெழும் வாழ்வியல் கோலம்

எழுந்தவன் விழுந்தாலும் புதைவதில்லை
ஏற்றங்கள் செயல் கொள்ள மறந்ததில்லை
புதிரென வாழ்செயல்கள் மறைவதில்லை
எதிர்கொள்ள விளைந்தவன் தோற்றதில்லை

அதனால் திட்டங்களும் தீர்மானங்களும் நமக்காக
நாமுணர்ந்து செயல்தீட்டின் வெற்றியின் படிகளாய்
தினமும்தினமுமாய் விளைந்தெழும் பயிரென
நாளைய வழிகாட்டிகளாய் நாமே வருடத்தை வளம் கொழிப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading