15
Oct
இல *100*
கற்றலின் படியே காசினி உயர்வே
ஏட்டில் எழுதிய எழுத்து அழியாது...
15
Oct
கற்றலின் படியே காசினி உயர்வே
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-10-2026
அறிவெனும் உளியை அகத்தினுள் செலுத்தி
ஆற்றலை நாளும் செதுக்கியே நாமும்
கற்றலின்...
15
Oct
கற்றலின் படியே காசினி உயர்வு
தங்கசாமி தவக்குமார்
கற்றலின் நாம்
காணும் பெறு
காலத்தால் என்றும்
நிலைத்திடும்...
கீத்தா பரமானந்தன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
முகமூடி !
விரட்டும் விதியின் விரைவு ஓட்டம்
விடாது தொடரும் பம்பர ஆட்டம்
கைக்குள் அடக்காக் கணக்கற்ற தேவை
கண்டபடி விரியும் எண்ணற்ற ஆசை
உவப்புத். தேடி உண்மைகள் புதைத்து
உருவம் மாற்றி உள்ளமும் ஆற்றி
உறுத்தும் வாழ்வின் உணர்வுகள் மரத்து
உலவும் மனிதர் உலகில் கோடி
உடையும் நடையும் களையும் இழந்து
உருக்குலைந்து உருட்டிடும் ஆயுள்
உலகுக்கு மறைக்க உதவிடும் தருணம்
முகமூடி என்னும் முகக்கட்டுக் கவசம்
பலவேடம் இட்டு பல்லிளித்து நின்று
பாசாங்கு பசப்பில் சுயந்தனை களைந்து
பரிமாணங் கொண்ட கனவானாய் மின்ன
பலநேரம் துணையாகும் முகமூடி வேஷம்
முகமூடி களைந்து முழுதாய் ஓர்நாள்
உளமார வாழ மனதார ஏக்கம்
உணர்வுகள் மரத்து ஜடமாகு முன்னே
முகமூடி இல்லா ஓர் நாள் வருமா ?
கீத்தா பரமானந்தன்
17-02-25
Author: Nada Mohan
06
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-10-2026
என் மடியில் மழலையாய் நீயும்
எம் வாழ்வின் வரமாய்...
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...