புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

வருமா வசந்தம்

ஜெயம் தங்கராஜா

ஆதவன் கதிர்கள் பூலோகத்தைத் தொட்டன
ஆதலால் வசந்தம் கோலங்கள் இட்டன
பச்சை ஆடை அணிந்தாள் பூமியன்னை
மிஞ்சும் அழகாய் மாற்றிக்கொண்டாள் தன்னை

பாடியே பறக்கும் பறவைகள் உயரத்தில்
வாடிய உயிர்களும் இனியில்லை துயரத்தில்
வந்ததால் வசந்தம் ஏற்பட்ட நிகழ்வு
சிந்திடும் மகிழ்ச்சிக்கு இல்லையே அளவு

இதுபோல் வசந்தம் வாழ்விலும் வருமே
புதிய அழகான காலத்தை தருமே
தொலையாது வசந்தமும் நுழைந்திடும் தன்னாலே
அழைக்குது அங்கேதான் திரும்பிப்பார் பின்னாலே

Nada Mohan
Author: Nada Mohan