புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

திருமணம்

ஆயிரம் காலத்துப் பயிர்
ஆயிரம் பொய்களே வேர்
சத்திர சாம்பிரதாயங்கள் நகர்த்தும் தேர்
சங்கடங்கள் பலதும் இருக்குது பார்

கூடி நிற்கும் சொந்த பந்தம்
குதித்துக் கொட்டமடிக்கும் விடலை க்கூட்டம்

சாதிப் படகிலேயே நடக்கும் பயணம்
சீதனத் தொகையே
தொடுக்கும் பயணம்
நீதி நீயாயமற்ற பேரம்
நிதிநிலமைகளே பெரும்பாலும் ஆளும்

பசையுள்ள பெண்ணே வாழும்
வழியற்ற பெண்ணோ காயும்
இசைவற்ற செயல்களால்
இங்கிதமற்ற நிகழ்வுகளால்
பழிபலசூடி
முதிர்கன்னியாயே மூப்பைத் தழுவும்
முகவரியும் தொடராமலே நழுவும்

கூடிச்செய்த திருமணம்
கூடச்செய்த திருமணம்
வாடவும் செய்யும்
வாட்டவும் செய்யும்
வாழவும் செய்விக்கும்
நாட்டத்தைப் பொறுத்தே
நாலும் நடக்கும்
நன்மைதீமை கிடைக்கும்

ஆணுக்கும் பெண்ணுக்குமே திருமணம்
ஆனாலும் இப்போ நடக்குது
வீணுக்கு சிலதிருமணம்
சந்ததிக் காப்பே நறுமணம்
சாய்த்திட எண்ணுதல்
தரும்சங்கடம்

மனோகரி. ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan