பட்ட மரம்

ராணி சம்பந்தர்

தொட்டதெல்லாமே துலங்குமே பூமி
போட்டதெலாம் பொன்னாகும் சாமி
நட்டதெலாம் மண்ணில் கண் திறக்க
நல் விளைச்சலில் நாதியற்றவரது
பணப் பெட்டி கோடீஸ்வரராக்குமே

எவர் கண்ணில் பட்டுக் கொட்டியதோ
சமரில் போட்ட குண்டு மழையில்
உதிரம் முட்டி உயிரோடு பயிருமெரிய
சுட்ட மண்ணோ சுடுகாடு ஆயிற்றே

காலஞ்செல்ல நாட்டியது பட்ட மரமாய்
விறகானதும் பச்சைமரம் மீண்டோர்க்கு
நிழலானதும் பசுமரத்தாணி ஆயிற்றே

முடக்கப்பட்ட வாழ்வு மூடப்பட்ட வாசலில்
பட்ட மரப் பனைகள் தலையில்லாமல்
முண்டமாய் நிற்பது போலத் தமிழன்
வாழ்வும் தலையற்ற சிலையாய்
முடஙகிப் போனதே பட்ட மரமாய் .

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading