அறிவின் விருட்சம்

ஜெயம் தங்கராஜா
அறிவுக்கு இதுவொரு விருந்து
அறியாமையை நீக்கிடும் அருமருந்து
புத்தியை எட்டவைக்கும் பெட்டகம்
வாழ்க்கைக்கு கிடைத்த பொக்கிஷம்

வாசித்தால் அறிவும் விருட்சம்
நேரிய சிந்தனை சுரக்கும்
நேசி அறிவார்ந்த புத்தகத்தை
சுவாசி அதிலுள்ள தத்துவத்தை

கருத்துக்களை சுமந்த தாள்கள்
உருவாக்கும் ஆக்கத்தின் நூல்கள்
படித்தல் என்கின்ற பழக்கம்
கொண்டாலே ஏனிங்கு கலக்கம்

கற்றோர் அடைந்திடும் சொத்து
கற்பனை விருட்சத்தின் வித்து
ஆளுமையின் அதிகரிக்கும் ஆழம்
புத்தகப்புழுவானால் அனுபவம் நீளும்

தேடத்தேட ஞானம் உருகும்
புரட்டப்புரட்ட அறிவதும் பெருகும்
பருகப்பருக தேனாக இனிக்கும்
வார்த்தைகள் சுவைபோலில்லை முக்கனிக்கும்.

சித்தம் அனுதினமாய் சீரடைந்தது
இத்தரை வாழ்வும் பேறடைந்தது
புத்தகம் என்பது புத்தரைப்போல்
வித்தகனாக்கிடும் உயிர்ப்புள்ள நூல்

Nada Mohan
Author: Nada Mohan