ஒப்பிலாத்தெய்வம்..

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2149..!

ஒப்பிலாத்தெய்வம்..

ஒப்புவமை இல்லாதாள்
அன்னை எனும் தெய்வம்
இப்பூவுலகில் நமை ஈன்ற
அன்னை எனும் தையல்..

கண்ணுக்குள் காத்திடுவாள்
கலங்கரை விளக்கமாகிடுவாள்
புலருகின்ற காலையின்
கதிரொளி இவளாகிடுவாள்..

இல்லையென்று சொல்லாது
இருப்பதைப் பகிருவாள்
இன்முகம் காட்டியே தன்
பிள்ளை பசி ஓட்டிடுவாள்..

நடனாடும் இறை வடிவே
நாட்டமுள்ள சக்தி உருவே
படைப்பின் சாமி இவளன்றோ
பார் வியக்கும் தாய்மை அல்லோ..

இயங்கு நிலை இவள் செயல்
இணங்கி வாழ்தல் குணமது
கருவறை தந்த சாமியாம்
கருணையோடு காத்திடுவோம்..
சிவதர்சனி இராகவன்
15/5/2025

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading