நாளை

ஜெயம் தங்கராஜா

இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும் விடிந்திடாதோ நாளை
வேளையும் வந்து மகிழ்விக்காதோ நாளை

தேடி அலைபவருக்கு கிடைத்திடாதோ நாளை
நாடியவர்க்கு இறைவன் அருளாரோ நாளை
சுமைகளும் நீங்கி சுகமாகாதோ நாளை
அமைதியின் கோலம் வாராதோ நாளை

புது யுகமொன்று மலராதோ நாளை
புதுமையின் பக்கங்கள் விரியாதோ நாளை
நன்மைகள் தாங்கியே உருவாகிடாதோ நாளை
இன்றல்ல நேற்றல்ல மாற்றங்களோ நாளை.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading