எழுத்தாளர் வாரம்

செல்வி நித்தியானந்தன்
எழுத்தாளர் வாரம் ( 718)

எழுத்தாளர் வாரமும்
எழிலாய் வந்திடுமே
எண்ணும் எழுத்தும்
எழுகைக்கு உரமாமே

எண்ணச் சிறகுதனை
எழுத்திலே பதியட்டும்
ஏற்றம் கண்டும்தான்
ஏட்டிலே விரியட்டும்

ஆண்டுகள் இருபத்தியெட்டு
ஆயிரமாய் படைப்புக்கள்
அவனியிலே தனித்துவமாய்
அடியெடுத்த பா முகமாய்

எண்ணிய வலிகளெல்லாம்
ஏக்கத்தின் நினைவலைகள்
ஏற்றத்தாழ்வு இல்லை
ஏகபோகமாய் சிறகடிக்குதே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading