ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

கணப்பொழுதில் ..

நகுலா சிவநாதன்

கணப்பொழுதில்

கணப்பொழுதில் மாற்றம் கடுகதி வேகம்
மனப்பொழுதில் எழுமே மாறுபடும்கோலம்
தினப்பொழுதும் தித்திப்பாய் எண்ணஅலை
திசையெங்கும் மாறுமே கணப்பொழுது வாழ்க்கை

காலமாற்றம் கடுகதி வேகம்
கரும்புகை குண்டுகளால் நிரப்பும் ஞாலம்
கோல அழகுக் கட்டிடமும்
சுக்குநூறாகும் சுடுகின்ற கொள்கலனால்

வெடிக்கின்ற சத்தம் வானைப்பிளக்க
வெந்தணல் கொழுந்துவிட்டெரிய
மாடிக்கட்டிடமும் மனையிழந்து வீழும்

கணப்பொழுதின் வண்ணம் காலச்சுழற்சியில்
கனவுகளும் சஞ்சரிக்கும்; காதலும் முகிழ்க்கும்
வனப்பொழுதும் பறவைகளால் வட்டமிடும்
வாஞ்சையாய் புதுமாற்றம் வந்திடும் நெஞ்சினில்

நகுலா சிவநாதன் 1812

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading