சித்திரமே வாராயோ……..

இரா.விஜயகௌரி
அஞ்சு வண்ண சித்தரமே
அழகான பேரொளியே
குஞ்சு மகள் உன் வரவை
கூடி நின்று தேடுகின்றோம்

கருவறையில் உன் நடனம்
களித்திருந்து பேசுகின்றா்ய
ரசித்தெழுந்து உரசுகின்றாய்
கணங்களுக்கும் பொருள் நிறைத்தாய்

எதிர்பார்ப்பை விதைத்து விட்டு
காத்திருப்பில். எங்கள் உலா
கனவினிலே வாழ்வெழுதி
கண்மணியாய் வளருகின்றாய்

எங்கள் சித்திரத்து பொற்சுடரே
சீரெழுதும் கனிமொழியே
உற்சவத்தின் பெருந்தேரில்
உலவ வரும் தேவதையே

காத்திருந்து தேடுகின்றோம்
கண்மணியே. வாராயோ
மணிவயிற்றை விட்டகன்று
மலர்மடியில் கொஞ்சியெழ……..

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading

வணக்கம் வசந்தாஜெகதீசன் வீட்டுத்தோட்டம்...அழகுறுபயனின்பயன்பாடு ஆரோக்கியஉணவின்முதலீடு முயற்சியின்மூலதனமாகும் முழுமையில்மனதுநிறைவாகும்காய்கறி,கனிகள் ருசி நிகரே பொழுதுபோக்கின் முதன்மை வலு முதலீடு அற்ற வருமானம் நித்தம் நித்தம் பயனாகும் பலராய்...

Continue reading