குதூகலம்

ஜெயம்

குதூகலாம்

பழைய குப்பைகளை மனதினுள் தேக்கி
நுழைந்து கவலைக்குள் வாழ்க்கையை ஆக்கி
தொலைத்தே மகிழ்ச்சியை காலத்தைப் போக்கி
பிழைக்கும் மாந்தர்க்கு வெறுமையே பாக்கி

அடைந்துவிட குதூகலம் ஊறிவிடும் புத்துணர்ச்சச்சி
இடைமறிக்கும் துன்பங்களை வாழ்க்கையின் நிகழ்ச்சி
புடைசூழ்ந்தால் துயரங்கள் இல்லையங்கு மீட்சி
விடைபெறாத சந்தோசத்தால் ஆரோக்கியத்தின் ஆட்சி

பணம் மகிழ்ச்சியை ஒருபோதும் நிர்ணயிப்பதில்லை
மனமொன்றே ஆனந்தத்தை உருவாக்கும் எல்லை
உணர்ந்துகொண்டால் உண்மையினை பீடிக்காது தொல்லை
கணங்களுக்குள் களிப்பவனே புன்னகையின் பிள்ளை

18-08-2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading

வணக்கம் வசந்தாஜெகதீசன் வீட்டுத்தோட்டம்...அழகுறுபயனின்பயன்பாடு ஆரோக்கியஉணவின்முதலீடு முயற்சியின்மூலதனமாகும் முழுமையில்மனதுநிறைவாகும்காய்கறி,கனிகள் ருசி நிகரே பொழுதுபோக்கின் முதன்மை வலு முதலீடு அற்ற வருமானம் நித்தம் நித்தம் பயனாகும் பலராய்...

Continue reading