நன்றியாய் என்றுமே!

நகுலா சிவநாதன்
நன்றியாய் என்றுமே!

பெரும் செல்வம் கல்விதனை
பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம்
அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை
அன்போடு வளர்த்திட்டோம்
கருவாகக் கல்விதனை கணக்கின்றி
கற்றிடவே வைத்திட்ட ஆசான்களை
கண்ணிறைந்து போற்றுகிறோம்
கடவுளர் என்றென்ணி!

அழியாத அருட்செல்வம் அகமதிலே
அன்போடு நிறைத்திட்ட வாழ்விலே
குருவான குலம்விளங்க என்றென்றும்
தருவாக கல்விதனை தழைத்திட வைத்தே
தண்மதியாய் தந்திட்டார் தலைசிறக்க
நண்மதியாய் நாமின்று போற்றுகிறோம்
நனிசிறக்க நல்வாழ்வு நன்மையாய்!!
என்றென்றும்!

நகுலா சிவநாதன் 1819

Nada Mohan
Author: Nada Mohan