மறதி

ஜெயம்

நினைவுகளின் சுமைகளை இறக்கிவைத்திடும் மருந்து
தனைமறக்க துணையாகும் மனதிற்கு விருந்து
அவமான கசப்புக்களை வெளியேற்றும் கருவி
கவனத்தை ஒருங்கிணைக்க வேண்டுமிந்த மறதி

கடந்துசெல்லா வலிகளுடன் இருப்பவரும் துவண்டு
கடவுளின் கொடையிதென சொல்வதும் உண்டு
மறக்கத் தெரிந்த மனிதர்களே மகிழ்வோடு
சிறக்கின்றார் ஆயுளுக்கும் மண்ணுலக வாழ்வோடு

ஆடிக்கொள்ளும் மனதிற்கும் இதனாலே ஓய்வு
தேடியே கண்டுபிடித்த ஞானிகளின் ஆய்வு
ஆண்டவன் நமக்களித்த அற்புத சக்தியிது
தாண்டிவிடாதே நிறைந்துவிடின் பேதலிக்காதோ புத்தியது

இழப்பதின் இரணங்களும் மறதியால் பஞ்சே
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சே
பயணத்தை இலகுவாக்கும் மறதியின் சேவை
பயனுள்ள ஞாபகங்களே நியாயமாக தேவை

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading