மூப்பு வந்தாலே -02.10.2025 ஜெயா.நடேசன்

அகிலமதில் அறிவுச் சிகரங்களாக
வாழ வைத்த எமது தெய்வங்கள்
அன்புக்காக ஏங்கி அரவணைத்தவர்கள்
நிகரில்லாத அன்பை தருபவர்கள்
வயதிலும் அறிவிலும் அனுபமானவர்கள்
முதிர்ச்சி பெற்ற ஆலோசகர்கள்
மூப்பு வந்தவுடன் முடங்கியவர்கள்
கால் தடுமாற கூனிக் குறுகியதில்
கைத் தடியுடன் தட்டுத் தடுமாறியதில்
பல்லுப் போக சொல்லுப் போகும் நிலையில்
நரை முடி பொன் முடியான கோலமதில்
என்றும் தெய்வத்தின் பாதச் சுவடுகளாக
உடல் முதுமையானாலும் உள்ளம் இளமையே

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading