மூப்பு வந்தாலே………..

இரா.விஜயகௌரி
யாப்பில் எழுதும் விதி -இது
மூப்பின் முனகல் ஒலி
முதுகை வளைத்தெழுந்து
மூலையில் ஒதுங்குதலோ

நாளும் உழைத்தவர்கள்்-தேனீ
போன்றலைந்து களம் கண்டு
விளைநிலப்பயிர் வளர்த்து -பின்
வித்தாய் மடிவதுவோ மூப்பில்

உடைத்து விடை தொடுப்போம்-எம்
உயர்வை உணர வைப்போம்
நம்மை நாமுணர்ந்து -நாணி
கூனி குறுகல் தவிர்ப்போம்

உணவும் பயிற்சி தன்னை_எம்
தினத்தின் வனப்பு என உணர்வோம்
தேடல் வாழ்வின் வளமையாக்கி
வாழும் வழியை வெல்வோம்

அனுபவத்திரட்டின் செழுமை
அருமை பட நாம் தெளிந்து
வியப்பில் மிரள வைத்தே
மூப்பை ரசித்தே சொல்வோம்

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading