கடமை முதன்மை

நகுலா சிவநாதன்
கடமை முதன்மை

காலையில் எழுவது கனிவென நாளும்
மாலையில் மகிழ்வுடன் உரைப்பது நலமே
வேளைகள் தோறும் தேடல்கள் சிறப்பே
வேண்டும் இறையைத் தொழுவது நலமே!

பாடல்கள் பாடி பாலர்களை ஊக்குவிப்பதும்
பாட்டி உரையைக் கேட்பதும் நலமே
தேடல்கள் எமக்குள் தேடிச் சேர்ப்பதும்
தெளிந்த அறிவைப் பெறுவதும் நலமே!

உலக இயற்கை உன்னத படைப்பு
உனக்குள் தேடல் உள்ளுர விரியட்டும்
கணக்குப் பார்த்து காலத்தை கழியாதே
கடமைகள் முதன்மை அதைநீ நம்பு

நகுலா சிவநாதன் 1828

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading