அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

பெண்களைப் போற்றுவோம்

சக்தி சிறினிஙச்கர்
பெண்களே உலகின் கண்கள் ஆவார்
மண்ணின் பொறுமை மங்கை அவளே
விண்ணிலே பெருமை வீரமும் கொண்டாள்
கண்ணென இருந்து கடமையைச் செய்வாள்
மலரினை ஒத்த மென்மையும் அவளே
நிலவன் ஜொலிப்பாள் நித்தமும் சேவை
செய்துமே இல்லம் செழித்திட உழைப்பாள்
தாதியாய்த் தாயாய் தந்தையாய் சோதரியாய்
ஆதி முதலாய் அன்பின் சிகரமாய்
இல்லறம் சிறந்திட இமயமாய் இருப்பாள்
நல்லறம் செய்ய நற்றவம் பெற்றாள்
பேறு பெற்றவள் பெண்ணே அறிவாய்
ஆறுதல் அளித்திட அருகினில் இருப்பாள்
தென்றலும் அவளே தேற்றலும் செய்வாள்
துன்ப வேளையில் துவண்டிடா மங்கை!

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading