பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

போரிடும் உலகமோ..!!

வியாழன் கவி 2307!!

போரிடும் உலகமோ..

பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள் வாய்
அகப்பட்ட உயிர்கள் நிலை எங்கே!!

வான் மீது வட்டமிடும் வல்லூறாய்
வாரிக் கொட்டும் குண்டுமழை
வான் முட்டும் கட்டடங்கள்
மண்ணை வந்தே முத்தமிடுதே..

கருகிப் போகும் குருத்துகளாய்
இளம் தலைமுறையும் வாட
குருதி மழை பொழியுதெங்கும்
குற்றங்களே நிறையுதெங்கும்

வான் வழி போக்கிவரத்து
வழிகள் அடைபட்டுப் போக
அங்கும் இங்குமாய் உறவுகள்
அல்லலில் தவித்தல் மாறாதோ
சிவதர்சனி இரா
19/3/2026

Author: