தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள்- 2172 ஜெயா நடேசன்

இறைவனின் இயற்கை வனப்பில் ஐம்பூதங்கள் இருப்பில் நீர் ஒன்றே சூரிய வெப்பம் நீர் நிலையில் ஆவியாகி போர்...

Continue reading

முதன் முதலாக

செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக

வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்

மகவினை கைஏந்தி
மண்ணிலே இருட்டு
மனதிலே பயமும்
மன்றாட்டிய இறையை

நீண்டதொரு வரிசை
கண்டதொரு காட்சி
மீண்டும் இந்நிலையா
மீளமுடியா வலியும்

நடுசாமம் கால்கடுக்க
நண்பரின் உதவியுடன்
நாட்டைவிட்டு நானும்
நாடியே அண்ணனிடம்

அதிகாலை வண்டியில்
அங்கிருந்து கிளம்பி
அனுப்பி வைத்தும்
அனுபவமும் முதலாக

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading