” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே

ஜெயம்

விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத் தாங்கும் உன்னத அதிசயம்
நிலமும் நீரோடு கலந்து பரவசம்

தண்ணீரே உன்னைத் தவித்தொரு வாழ்வா
நீரே நீயின்றி உலகும் இயங்குமா
மனித வாழ்வில் நீரே நித்தியம்
அகிலமே உணர்ந்திடு இதுவே சத்தியம்

ஒரு சொட்டு நீரினதும் அருமையறி
பெரு விருச்ச வளர்ச்சியின் இரகசியமறி
நீரின்றி தரணியில் உயிரே இல்லை
பசுமையை கண்டதன்றோ பாரதன் எல்லை

ஜெயம்
27-03-2026

Author: