” அடையாளத்தின் முகவரி “

ரஜனி அன்ரன் (B.A) ” அடையாளத்தின் முகவரி ” 16.04.2026

குரலென்பது வெறும் ஒலியல்ல
ஆன்மாவின் வெளிப்பாடு ஆளுமையின் அடையாளம்
எண்ணங்களைச் சொல்லும் விசையாக
சொற்களுக்கு உயிர்கொடுக்கும் ஆயுதமாவது குரல்
உலகக்குரல் தினமான இன்று
உயிர்கொடுக்கும் குரலைப் போற்றிடுவோம் !

விம்மலில் விசும்பலில் துயரம் சொல்லும்
கோபத்தின் உச்சத்தில் எரிமலையாகும்
கொஞ்சும் மொழியில் தேனாய் இனிக்கும்
தாயின் தாலாட்டிலோ அமைதி கொள்ளும்
அதுவே அடையாளத்தின் முகவரி குரல் !

உயிரின்ஓசை உதிரமின்றி ஓடும்நதியிது
ஊமைச் சனத்தின் உரத்த சிந்தனையிது
அநீதிகண்டு எழும்பும் பேரலை
அக்கிரமம்கண்டு கொதிக்கும் எரிமலை
சத்தமாகப் பேசுவது சிறப்பல்ல
சத்தியக்குரல் ஒலிப்பதே
உலகிற்குப் பொறுப்பு !

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading