திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

“ முயற்சியே பலம் முனைப்பே திடம்“

நேவிஸ் பிலிப் கவி இல( 611)

பாதங்கள் நடக்கத் துணிந்து விட்டால்
பாதைகள் மறுப்பு சொல்வதில்லை
முனைப்போடு நாம் முயன்றால்
தோல்வி என்பதே நமக்ககில்லை

திட்டமிடா உழைப்பும்
முடியுமா என்ற நினைப்பும்
பாதையின் தடைக்கல்லாகும்
வீழ்ச்சி கண்டு முடங்கிடாமல்
திடமோடு செயல்பட்டால்
வானமே நம் வசமாகும்

முன்னேற்றப் பாதையிலே
விழிகள் விடியலைத் தேடட்டும்
வெற்றியின் வாசல் ஏறிச் செல்ல
முயற்சி நம் படிக் கல்லாகட்டும்

நம்பிக்கை என்பது நாளைய வெற்றியின் விதை
இன்றே அதனை விதைத்திடுவோம்
அயர்ச்சி இன்றி முயற்சியோடு செயலாற்றி
பாரினில் மேன்மை பெற்றிடுவோம்.
நன்றி………..

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading