குன்றியதே சுறுசுறுப்பு (764) 28.05.2026

செல்வி நித்தியானந்தன் குன்றியதே சுறுசுறுப்பு குளிரும் காணாமல் போக வெப்பமும் வேகமாய் வந்திட ஒவ்வாமை கூடவே சேர்ந்திட ஒன்றித்து வாழும் நாமும் விற்றமீன் ...

Continue reading

28.05.2026 மண் வாசம்-3000 ஜெயா நடேசன்

தாய் மண்ணே உன்னை மறக்கவில்லை
கால் பதித்த நாள் தொட்டவரை இற்றைவரை
புலம்பெயர் வந்து வசதியாக வாழ்ந்தாலும்
எம்மால் என்றும் மறக்க முடியவில்லை
இயற்கை அன்னை எழில் தந்த கொடை
பசுமை போர்த்திய பல வளங்கள்
பனை தென்னை தோப்புக்கள் வனங்கள்
மூலிகை நிறைந்த மருத்துவ செடி கொடிகள்
கடலால் சூழப்பட்டு கடல்படு திரவியங்கள்
மீனவர்களின் தொழிலின் முயற்சியும்
வந்தாரை வரவேற்று உவந்தளிப்பு சிறப்பும்
பள்ளி சென்ற காலமும் படிப்பின் உயர்வும்
விடுமுறை நாட்களில் விளையாட்டும்
கோவில் திருவிழாக்கள் உறவுகள் சந்திப்பும்
எல்லாம் எம் தாய் மண்ணின் நினைவுகளே

Jeya Nadesan
Author: Jeya Nadesan