திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

மூளும் மாயைகள்

ராணி சம்பந்தர்

கொடுமையில் அலங்கோலம்
கடுமையான கால மாற்றமே
படும் அவஸ்தையிலே சீற்றம்
கூனிக் குறுகி அநியாயங்கள்

மூளும் மாயை உலகமதிலே
தாயே தான் பெற்ற பிள்ளை
கூட்டிக் குடுக்கும் பரிதாபமே

ஆளும் அரசுக்கோ தலையிடி
களுத்து முட்டப் பேரிடி அவலம்
நாளும் பொழுதும் சேருமந்தப்
போதை வஸ்துகளின் பம்பல்

பாழாய்ப்போன மானிட வர்க்கம்
வெந்து வெதும்பி நொந்துநூலாகி
சந்து பொந்தில் சொந்தமின்றியே
அனாதையாகச் செத்த மரண ஓலம்

சேர்ந்து தொடரும் சாலை விபத்தும்
படரும் கொலை ,கொள்ளைகளும்
தினந்தினம் அதிகரிக்க மனமோ
உழைச்சலாகி வேறு திசையிலே
திருப்புதே .

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading