11.06.2026 பூக்களின் நினைவில்-2028 ஜெயா நடேசன்

11.06.2026 பூக்களின் நினைவில்-2028 ஜெயா நடேசன்
இயற்கையின் வனப்பிலே
இறைவன் தந்த கொடை
பாரெங்கும் மணம் வீசும் பூக்கள்
கோபம் அதிகம் வரும்போதும்
சந்தோஷம் மிகு பெறும்போதும்
அடிக்கடி என் கவி வரிகளில்
வந்து போவது அழகிய பூக்களே
என் முன்னால் காட்சி தரும் பூக்கள்
பலவித நிறப் பூக்கள் ரொம்ப பிடிக்கும்
மனம் நிறைய மகி்ழ்வாகின்றது
மங்கையரின் கூந்தலுக்கு
சரமாக மாலையாக அழகாகிறது
இறைவன் பாதமதில் சில பூக்கள்
இறுதி ஊர்வல சமாதியில் பல பூக்கள்
பூக்கள் எவருக்கும் கவலை தருவதில்லை
சிரிக்கும் பூக்களாக சொந்தமாகிறது
காதலரின் அன்புப் பரிசாகிறது
அவனியில் அற்புத அழகாக மனதில்

Jeya Nadesan
Author: Jeya Nadesan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading