மாறியதே வாழ்க்கை

நகுலா சிவநாதன் மாறியதே வாழ்க்கை மாறியதே வாழ்க்கை மனம்போன போக்கிலே! கூறியதே கதைகளும் குழம்பிய குட்டைகளாய் வெப்பத்தின் அதிகரிப்பாய் வேறிட வாழ்க்கையும் இன்று தெப்பமாய்...

Continue reading

மாறியதே வாழ்க்கை

நகுலா சிவநாதன்
மாறியதே வாழ்க்கை

மாறியதே வாழ்க்கை
மனம்போன போக்கிலே!
கூறியதே கதைகளும்
குழம்பிய குட்டைகளாய்

வெப்பத்தின் அதிகரிப்பாய்
வேறிட வாழ்க்கையும் இன்று
தெப்பமாய் மிதக்கும்
நாகரீக மோகமும் சேர்ந்து

தேடிய வாழ்வல்ல இது
தேடிப் பெற்ற வாழ்வாக
கூடியே வாழ்வுமில்லை
குதூகலம் மனங்களில்லை

மாறியதே வாழ்வு
மாற்றங்கள் மணிக்கணக்காய்
ஆளுமைகள் ஆற்றல்கள் அதிகரித்தாலும்
அப்புவும் ஆச்சியும் இல்லாத வாழ்வு

மாற்றங்களே வாழ்வாக
மாறியதே புலத்து வாழ்க்கை
தேற்றமாய் ஏற்றுக்கொண்டு
தேசத்தில் வாழ்வோமே!

மாற்றம் வாழ்வில் வேண்டும்
மனமாற்றம் இன்றி
உலக மாற்றத்துடன்
உள்ளுர சேர்ந்து வாழ்வோம்.

நகுலா சிவநாதன் 1864

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading