மொழியே என் முகவரி..!!(2390)

மொழிதனை இயம்பிட்ட மழலைகளாய் நாம், தாய்மொழிதனை கேட்டு கருவறையில் கண்ணுறங்கும் போதே கற்றிட்ட சிசுக்களாய் நாம்! இவ்வுலகில் அவதரித்த பொழுதினிலே, “அம்மா” என்ற மூன்றெழுத்து...

Continue reading

மொழியே முகவரி…….

ரஜனி அன்ரன் (B.A) மொழியே முகவரி….. 17.09.2026

மொழியே என்விழியே நீயே என்முகவரி
கருவறைத் தொட்டிலில் கேட்ட
முதல் தாலாட்டின் ராகம்நீ
மூச்சுக்காற்றின் ஜீவனும்நீ
நாடி நரம்புகளில் ஓடும் குருதியின் சத்தமும்நீ
நிலையான நித்திய முகவரியும்நீ !

காலங்கள் கோலங்கள் தான் மாறினாலும்
அடையாளமாய் வாழும் அதிசயம் தான்நீ
எழுத்துக்களால் இதயத்தை ஆளுகிறாய்
வார்த்தைகளால் வாழ்வைச் செதுக்குகிறாய்
கடல் கடந்து சென்றாலும்
கண்முன்னே வந்துநிற்கும் அதிசயமேநீ !

முகமூடிகளின் உலகமிது முகத்தைக் காட்டும்
ஒரேகண்ணாடி மொழிமட்டுமே
ஆயிரமாயிரம் முகவரிகள் அஞ்சல்பெட்டியில் தூங்கலாம்
அண்டத்தின் எந்தமூலையிலும்
அடையாளம் காட்டும் முகவரி மொழியே
தேசஎல்லையைத் தாண்டிநின்றாலும்
நேசமாய் நாவில் உச்சரிக்கும் மந்திரம் மொழியே !

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading