Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வவாரம்-17.01.2023
கவி இலக்கம்–206
புதிர்
———
இன்று கவி தலைப்பே புதிராக திகழ்கிறதே
கவிப் புதிரில் 206 ஆவது இலக்கமாகிறதே
கவிஞர்கள் புதிராக புதுக் கவிதை படைக்கிறனரே
மனித வாழ்க்கையே புதிராக பதிவாகிறதே
நம்மை புரிந்தும் புரியாதோர் பலரே
புரிகின்ற வரை வாழ்க்கை கேள்வியாகின்றதே
இன்ப துன்பம் புதிர் புதிராக வந்து போகுமே
விகடகவியோ புதிரான கதை கொட்டுவாரே
அறிவான புதிராக விடை சிரிப்பாக மலருமே
வயலிலே புதிதான புதிர் எடுத்தனரே
வீட்டு வாசலிலே புதிர் தொங்க விடுவினரே
பொங்கலுக்கு உதவிடும் புதிர் நெல் மணிகளே
உழவர் மக்கள் உண்டு மகிழ்ந்து கொள்வனரே
பொங்கல் பொங்க வைத்து மகிழ்ந்து உண்பனரே
ஜெயா.நடேசன்
ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan