கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-07.03.2023
இலக்கம்-213
நாதம்
————-
அம்மாவின் ஆரிரோ தாலாட்டில்
மழலை உறக்க மூச்சின் நாதம்
கோயில் மணியின் டாங் டாங் ஒலியில்
குடும்பங்கள் ஆரவார நாதம்
குயிலின் கீச் கீச் ஒலியில்
செவிகளில் ஓசு கேட்கும் நாதம்
நாதஸ்வர ஓசையின் பீப்பீ ஊதுகையில்
எழுப்பிடும் ஓங்கார நாதம்
வீணையின் சுர வரிசை நரம்பினில்
பொங்கி எழும் சங்கீத நாதம்
நடராஜனின் கால் சலங்கை ஒலியினில்
ஆனந்த உச்சத்தின் நாதம்
இசைக் கருவிகள் தொடரும் நாதம்
உயிர்களுக்கு நோய்க்கு மருந்தாகும்

Nada Mohan
Author: Nada Mohan