Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-16.03.2023
கவிதை இலக்கம்-1658
ஆகா வியப்பின் விழிகள்
நேற்றைய குழந்தைகள்
இன்றைய இளையோராக
நாளைய மூத்தோரே எம்முடன்
மனித வாழ்வின் சுழற்சியில் அமைகிறார்
எனது இரு அக்காவிற்கு மூத்த அண்ணராக
90 வயதிலும் இன்றும் எம்முடன் வாழ்வில் விழியாக
யோசெவ் இராஜசூரியர் அகவையில் கால் பதித்தார்
ஆங்கில பேராசிரியராக கராட்டி பயிற்சியாளராக
பிரான்ஸ் சர்வதேச ஆங்கில பாடசாலையில்
புகழுடன் பணியாற்றி ஓய்வில் இன்றும்
கெம்பீரத் தோற்றமும் விரைவு நடையும்
எம்மோடு இன்ப துன்பங்களில் கலந்து
பயணித்து கொண்டிருப்பவர் பெரியண்ணர்
புத்திமதி பலதும் கூறி வழி காட்டுபவர்
எத்தனை முறையேதும் பேசினாலும்
மூத்த அண்ணர் என்ற முறையில்
தனி மரியாதை யுடன் பயமுண்டு
சகோதரர்கள் தேவைக்கு பண உதவி
பொருள் உதவிக்கு குறைவில்லை
இடைக்கிடை கடிந்து கொள்ளும்போது
நாமும் அவரின் நல்வழியை பின்பற்றினோம்
சந்தோசமாக வாழ பணம் குணம் இருந்தும்
பாசம் காட்ட துணைவியார் தவறினது கவலை
பிள்ளைகளுடனும் சகோதரங்களுடனும்
தகப்பனாக நின்று உதவும்போது
நாம் என்றும் போற்றக் கூடியவராக வாழ்கிறார்
எமக்கு பல அறிவுரைகள் பேச்சிலும் கிடைக்கும்
அனுபங்கள் பலதையும் சொல்லுவார்
செயல்பாடுகள் இறை பக்தி பலதும் கண்டு
வியப்பில் ஆச்சரியமடைவதுண்டு
இன்றும் எமக்கு துணையாக அருகிலிருப்பதால்
மனம் மகிழ்ந்து வாழ்த்தி சுகமே வேண்டுகிறேன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading