கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-21.03.2023
கவி இலக்கம்-156
விடியல்
————-
விடிய விடிய பல நினைவுகள் வருதலும்
விடிந்த பின் என்ன நடக்குமோ என பயமும்
செங்கதிஓன் சிவப்பு உதயமும்
ஆலயமணி டாங் ஓசையும்
பறவைகள் கீச் சத்தமும்
ஏர் மாடுகள் சலங்கை ஒலியும்
வாகனங்கள் ஓடும் இரைச்சலும்
பூக்கள் மொட்டு விரிதலும்
இயற்கை செயல் வனப்பும்
பணியாளர்கள் அவசர நடையும்
அம்மாவின் அடுக்களை ஆரவாரமும்
பிள்ளைகள் பள்ளி செல்ல அவசரமும்
அற்புதமான விடியல் நிகழ்வே
விடியும் உதயம் நல்ல நாளாய் மலரட்டுமே
மக்கள் மனதில் ஒளி பிறக்கட்டுமே
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan