தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-23.03.2023
கவி இலக்கம்-1662
சுமந்தவளே சுமையானாள்
————————————–
தன் உதிரத்தையே தேனாக
பாலாக ஊட்டிய அம்மாவை
ஏணை சேலையில் கட்டி தாலாட்டி
ஆராரோ பாடி தூங்க வைத்தவளை
உணர்வுகளை அன்பாய் அளித்தவளை
பல கனவுகளுடன் வளர்த்தவளை
சம்பளம் அற்ற வேலைக்காரியாய்
கணவன் பிள்ளைகள் பணியானவளை
சுமையானாலும் சுகமாக சுமந்தபடி
வாழ வைத்த தெய்வம் அன்னையவள்
அன்பிற்காக ஏங்கித் தவித்தவளை
அரவணைக்க மனமின்றி ஆதரவின்றி
வலுவற்று மூலையில் ஒதுங்கினாள்
பிராத்தனையில் பிள்ளைகளுக்காக
உருகும் உள்ளம் கொண்டவளை
கடிந்து கொட்டி தீர்க்கும் பிள்ளைகள்
இன்று அவர்களுக்கு பெரும் சுமையானாள்
அளவுச் சாப்பாட்டிற்கு ஏங்கி எதிர்பார்த்தும்
அரவணைக்கும் பழக்கம் மறந்தவர்களாய்
கருவிலும் மடியிலும் கனவிலும் தாங்கி
சுமந்த தாய் இன்று சுமையாகி போனாளே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading