Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-24.05.2022
கவி இலக்கம்-176
நேற்றைய துயரங்கள்
—————————
உங்களுக்கு தெரியுமோ என்னவோ
தமிழ் இன மக்களுக்கு பலகாலமாக
நடந்த போராட்டங்கள் போர் யுத்த இழப்புக்கள்
கத்தியில் தொடங்கவில்லை
பிள்ளைகளின் கல்வியில்தான் தொடங்கியது
எம் இனம் எதைக் கேட்டது
எதற்காக போராடினார்கள்
எம்மை தேடி எது வரவில்லை
வெள்ளம் சுனாமி வந்தது
டெங்கு வந்தது கொரோனோ வந்தது
கஞ்சா வந்து கசிப்பு வந்தது
பாலியல் வந்தது பலாத்காரம் வந்தது
சண்டை வந்தது இடப் பெயர்வு நடந்தது
பசி வந்தது பட்டினிச்சாவு வந்தது
எம்மை தேடி எல்லாம் வந்தது
ஏற்றுக் கொண்டார்கள்
அத்தனையும் வந்தது அனுபவித்தே கடந்தார்கள்
ஆனால் மனித ஒற்றுமை என்பதே வரவில்லை
ஏற்றுக்

Nada Mohan
Author: Nada Mohan