வரமானதோ வயோதிபம் 53
” வரமானதோ வயோதிபம் “
Jeya Nadesan
வியாழன் கவி வாரம்-16.06 2022
கவி இலக்கம்-1528
முத்தாகும் வித்துக்கள்
—————————–
வித்துக்கள் முத்தாகும் விந்தையிது
முத்து விளையும் வித்துக்களை
விதைத்து வளர வைத்து பலன் பெற
முழு உழைப்பிலும் புனிதப்பணி செய்து
மேலான அனுபவங்களூடாக
இளையோரை பெரியோரை அறிவூட்டி
தமிழ்மொழி வளர்ச்சியை மேம்படுத்தி
செயல்பட்டு வருவது லண்டன் வானொலியே
பட்ட நல்ல அறிவினை பகிர்ந்தளித்து
அடுத்த தலைமுறை நோக்கிய பயணத்தில்
நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக
அள்ளி வீசி வழங்கி ஊக்கமளிக்கும் ஆசானுக்கும்
வியக்கத்தகு செயல்களில் கலைவாணிக்கும்
மகேசன்வேலை மகத்தான சேவையென
தம் அரும்பணிகளை அர்ப்பணித்து
பயணித்து ஆனி மாத நினைவுகளிலும்
இளைய சந்ததியினரை ஆளுமைப்படுத்தி
சிறப்பு மலர்களை முத்தாகும் வித்துக்களாக்கி
மொழி வீச்சு பேரலை வீச்சாகி வளர்வதும் சிறப்பே
மாமா மாமியருடன் நாமும் கை கோர்த்து
தமிழ்மொழியால் இளையோரை வளர்த்தெடுப்போம்
