கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-14.07.2022
கவி இலக்கம்-1539
பூமிப் பந்தில் நானும்
—————————-
சிகரத்தை நோக்கி
சிதறடிக்கும் இந்த பூமியிலே
எத்தனையோ வினோதங்கள்
நின்று பேச நேரமில்லை
நினைப்பதற்கு யாருமில்லை
இரவு பகலாய் உழைப்பதும் குறையவில்லை
நானிலத்தில் குழப்பங்கள் குறையவில்லை
ஓசோன் மண்டல ஓட்டை மறையவில்லை
சுற்று சூழல் பாதிப்பில் வெப்பம் குறையவில்லை
சுட்டெரிக்கும் வெப்பம் தணியவில்லை
நான் நட்ட பயிர்களும் வளரவில்லை
விடுமுறை கிடைத்தும் தாயகம் போக முடியவில்லை
மனமோ உடலோ நல்ல நலமும் இல்லை
கொரோனோ ஆதிக்கம் தொற்று ஒழியவில்லை
சிலகாலம் செல்லும் சீரான நிலையுமில்லை
இறந்தோரை நினைத்து இதயம் ஓயவில்ல
இருப்போரை எண்ணி பயமும் தீரவில்லை
இன்றைய விலைவாசி ஏற்றம் குறையவில்லை
விரும்பிய உழைப்பில் பலனும் பெறவில்லே
பசி பட்டினியில் குடும்ப நிலையும் தீரவில்லை
இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் மரம் நடுவோம்

Nada Mohan
Author: Nada Mohan