தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-06.06.2023
கவிதை இலக்கம்-225
ஆறுமோ ஆவல்
———————–
மறுக்க முடியுமா மனிதனை
மறுத்தால் வாழ முடியுமா தமிழனாக
கூட்டு குடும்பமாக உறவாக அளித்து விட்டதை
திரும்ப பெற கிடைக்காதபோது
ஆறுமோ ஆவல்
இருக்க இடமின்றி அலைந்து
காணிகளை பறி கொடுத்து
பெளத்த விகாரைகள் கிளம்பும்போது
இளஞ் சிறார்கள் போதையில் மூழ்கும்போது
எம் சந்ததி நீண்ட காலம் வாழுமோ என
ஆறுமோ ஆவல்
கண்ணீர் வடிக்கும பெற்றோர்கள் கவலையில்
இளையோரின் கற்பனைகள் எதிர்பார்ப்புக்கள்
தவிடு பொடியாகும் நிலையில்
கொலை களவு வெட்டுக் கொத்து
எம் இனம் அழியப் போகும் நிலையில்
ஆறுமோ ஆவல்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading