Jeya Nadesan

கவிதை நேரம்-06.07.2023
கவி இலக்கம்-1718
வரப்புயர
————-
வரப்புயர வயலில் தண்ணீர் தேங்கும்
வளம் கொடுக்கும் என அடிப்படையில்
ஒளவைப் பாட்டியும் வரப்புயர சொன்னாவோ
வரப்புயர நம் வாழ்வும் உயரவே
வளமான தேகம் நலம் பெறுமே
முடியும் என்ற நினைவில் மனம் மகிழும்
செயல்படுவோம் முன்னேற்றம் காண்போம்
சூரியனின் ஒளி பெறுதலில் உயர் நிலை பெறுவோம்
காலம் பொன்னானது கடமை கண் போன்றது
நேரானன வழியை தெரிந்து கொள்வோம்
தெளிவான மனதுடன் நடந்து கொள்வோம்
முதியோர்கள் அனுபவங்களை துணை செய்வோம்
பல செயல்கள் செயல்பட முந்துவோம்
சாதனை படைப்போம் வழி சமைப்போம்
உடல் நிலை மேன்மை காண
யோகாசனம் செய்வோம்
கல்வியில் சிறக்க தேடல் செய்வோம்
கல்வியை படித்து முன்னேறுவோம்
ஆளுமையில் அற்புதமானது உயர்வதே
சரித்திரம் படைத்து சாதனை புரிந்தோர் பலர்
சமுதாயத்தில் சக்கரவர்த்திகளாய் வாழ்ந்தவர்கள்
உள்ளத்தால் உயர்ந்தே வாழ்வோம்
வரப்புயர வாழ்வும் வளம் பெறும்
முயற்சியில் உயருவோம் நிட்சயம் முடியும்

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading