உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeya Nadesan

Jeya Nadesan

கவிதை நேரம்-20.04.2023 கவி இலக்கம்-1675 வசந்த காலம் --------------------- வசந்த காலம் வந்து உதித்ததே நினைவில் என்றும் வசந்த காலம் கனவில் இன்று கோடை காலம் சுற்றுலா சென்றோர் வசந்தம் வர வேற்பர் நீரை நாடி ஓடி அரை குறை ஆடை குறைப்பர் உற்றார் உறவினருடன் உண்டு கழித்து மகிழ்வர் இளையோர் புதுப்புது நாடுகள் செல்வர் ஓய்வு எடுத்து உண்டு மகிழ்ந்து புதினங்கள் அறிவர் பச்சைப் பசேலென புற்தரை அழகிய காட்சிகள் இலை துளிர் விட்டு அரும்புகள் பிரசவிக்கும் மொட்டுகள் அரும்பு விட்டு அழகாக மலரும் தேனீக்கள் ரீங்காரம் பாடி தேனை உண்டு மயங்கும் பூக்கள் கூட மகரந்தம் காற்றறோடு கலக்கும் தம்மினம் பெருக்கி மகிழ்ந்து சிறக்கும் சில மக்களிடையே ஒவ்வாமை ஏற்பட செய்யும் கண் கடி மூக்கு சிந்தல் தும்மல் ஏற்படுத்தும் காற்றும் இனித் தென்றலாய் வீசும் வசந்தம் இறைவன் வரமென எதிர்பார்ப்போம் இயற்கையின் கொடையென பலன் பெறுவோம்் வளமாக வாழ்ந்து சிறப்புடன் அனுபவிப்போம்

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to