புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-28.12.2023
கவிதை இலக்கம்-1792
பிறப்பின் புதுமைகள்
——————
பூமியில் புதுமை நடந்தது உண்மை
புள்ளினங்கள் ஆடிப் பாடியது பெருமை
விண்ணவர் மண்ணவர் சேர்தது அன்பை
பாலக இயேசு அவதரித்து மேன்மை
அன்னை மரியாள் பெற்றது உண்மை
வானதூதர்கள் கானம் பாடியது இனிமை
இடையர்கள் காத்து நின்றது நன்மை
வானிலே விடி வெள்ளி பாதை காட்டிய நேர்மை
ஞானிகள் காணிக்கை கொடுத்தது அன்பை
இறுதியில் அவர்களும் சந்தித்தது உண்மை
புதுமை கண்டு பூரித்தது அதிசய செய்கை
விடுதலையின் விடியலாய் அவதரித்தது உண்மை
சிரித்த முகத்துடன் இளைய பூ மலர்ந்து சாதனை
சரித்திரத்தின் புதுமையாய் உதித்தது சரிதை
மனிதம் மலர்ந்திட மண்ணிலே தோன்றியது நன்மை
உத்தமனாய் பிறந்த இயேசுவை ஆராதிப்போம் கடமை

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading