Jeya Nadesan

கவிதை நேரம்-17.11.2022
கவி-இலக்கம்-1598
மண்ணில் புதைந்த மைந்தர்கள்

மண்ணில் புதைந்த மாவீரர்கள்
விண்ணதிர மண்ணதிர வீரமானவர்கள்
விதையாய் வித்திட்டு நினைவான மறவர்கள்
வித்தாகி வேராகி விழுதாகி விருட்சமாகி
விடுதலை வேண்டி மரணித்த மைந்தர்கள்
காலத்தால் அழியாத காவியப் புதல்வர்கள்
அணி திரண்டு போராடி உயிரை மாய்த்தவர்கள்
உங்கள் தியாகங்கள்் மரணங்களின் பிரிவுகள்
என்றுமே எம்மில் நினைவில் இருக்கும்
புலம்பெயர் தமிழர்கள் ஒன்று கூடி
புகழ் கொண்ட மாவீரர்கள் மகிமை எண்ணி
மாவீரர் நினைவு நாளில் அஞ்சலி செய்கையில்
வீர காவியங்கள் காலத்தால் அழியாதவையாகும்
கார்த்திகை மாதத்தில் ஒளி ஏற்றி வணங்குவோம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading