புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
Kavikco Parama Visvalingam (LTR 26 Vaazhththup Paadal)
லண்டன்தமிழ் வானொலி 26 பிறந்தநாள் பாடல்
பூமியம்மா சுற்றாமல் பொழுது விடியாது – அவள்
காலடியைக் காணாமல் காலம் நகராது
வானொலியைக் கேளாமல் வழிகள் திறக்காது – அதை
காணொளியாய் காணாமல் கனவு பலிக்காது – லண்டன்தமிழ்
வானொலி கேளுங்கள் வாழ்த்துக் கூறுங்கள்
பாமுகம் பாருங்கள் பரவசமாகுங்கள்.
லண்டன்தமிழ் வானொலிக்கு பிறந்தநாள்
எங்கள் தமிழ் மூச்சுடனே கலந்தநாள்
அகவை இருபத்தாறினைக் கடந்தநாள்
அனைவரையும் வார்த்தெடுக்கப் பிறந்தநாள்.
உருவாக்கும் ஊடகமே நீ வாழி
ஒன்றுபட்ட உறவுகளே துணையாகி
நம்பிக்கையின் அருவியிலே நீராடி – நீ
நாளைய தலைமுறையின் போராளி.
எத்தனையோ பிரம்மாக்கள் பாமுகத்திலே
படைப்பதெல்லாம் புத்தம்புது பூவுலகிலே
படைப்பாளி ஊக்குவிக்கும் பாங்கினைப் பாரு
திருஷ்டி இல்லா பிரம்மனுக்கு தீபத்தை ஏற்று.
காற்றலையில் பெரு வேள்வி பாமுகமாச்சு
காலப் பெருவெளியில் காவியமாச்சு
எண்ணும் எழுத்தும் இரு கண்ணென ஆச்சு
எண்ணங்கள் செயலூக்கம் பெற்றிடலாச்சு.
புலம்பெயர் தமிழ் சிறுவர் எழுத்தாளர் மாதம்
பொக்கிசமே லண்டன்தமிழ் வானொலிக் காலம்
பதினெட்டு ஆண்டுகால வளிநடப்பிலே
புலம்பெயர் தமிழ் சிறுவர் எழுத்தாளர் மாதம்.
கவிக்கோ பரம விஸ்வலிங்கம்
