Selvi Nithianandan தீதும் நன்றும் (616)

Selvi Nithianandan

தீதும் நன்றும்

இன்பமும் துன்பமும்
இரண்டறக் கலந்தது
இதனை மற்றவரை
இணைப்பது தவறாகும்

எண்ணமும் எண்ணலும்
ஏற்பின் மதியாமையாகும்
எட்டும் திசையெங்குமே
எல்லாமே புரியாமையாகும்

நன்மையும் தீமையும்
நல்வனுக்கும் உண்டு
நயம்பட உணர்ந்து
நலொழுக்கமே சிறப்பாகும்

அழகான வாழ்வினை
அர்த்தமாய் வாழலாம்
அவனியில் பிறரையும்
அன்பினாலே மதிக்கலாமே

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

Continue reading